கிளிநொச்சி இளைஞர் யுவதிகளை கலை, கலாச்சாரத்துடன் இணைக்கும் விசேட திட்டம்
இளைஞர் யுவதிகள் திசைமாறாது கலை, கலாச்சாரத்துடன் செயற்ட முயற்சிக்கும் செயற்பாட்டில் கிளிநொச்சி மாவட்டத்தில் 20500 இளைஞர் யுவதிகள் நேரடி அங்கத்தவர்களாக இணைக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் K.சிந்துஜன் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், “தேசிய இளைஞர்கள் சேவை மன்றத்தினல் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஊடகங்கள் வாயிலாக மக்களை விழிப்புணர்வூட்டுவதற்கான இன்று ஊடக சந்திப்பை மேற்கொண்டுள்ளோம்.
இளைஞர்கள் மத்தியில் பரவி வருகின்றதான போதைப்பொருள் பாவனை மற்றும் கலாச்சார சீரழிவுகள் தலைவிரித்தாடுகின்ற காரணத்தினால், கடந்த வருடமும் விளையாட்டு கலாச்சாரம் மற்றும் விவசாயம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் சார் வேலைத்திட்டங்களை மேற்கொண்டிருந்தோம்.
அந்த வகையில் கடந்த வருடமும் விளையாட்டு, கலாச்சாரம் உள்ளிட்ட பல்துறை ரீதியில் தேசிய ரீதியில் வெற்றியீட்டி சாதனையாளர்களாக பதிவாகியுள்ளனர்.
மேலும், கடந்த வருடம் தேசிய மட்ட போட்டியில் கலந்துகொண்ட கபடி அணி 3ம் இடத்தை றெ்று எமது மாவட்டத்திற்கு பெருமை தேடி தந்ததுடன், சாதனை படைத்துள்ளது.” என தெரிவித்துள்ளார்.