தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பிலான விசேட நாடாளுமன்ற அமர்வு இன்று

Parliament of Sri Lanka Sri Lanka Parliament Mahinda Yapa Abeywardena Ranil Wickremesinghe Sri Lankan political crisis
By Renuka Jul 01, 2023 03:02 AM GMT
Report

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பான விசேட நாடாளுமன்ற விவாதம் நடைபெறவுள்ளது.

அதன்படி இந்த விவாதம், இன்றைய தினம் (01.07.2023) காலை 9.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை விவாதம் நடைபெறவுள்ளது.

உள்ளூர் கடன் மறுசீரமைப்பு முன்மொழிவு மீதான விவாதத்தின் பின்னர், வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டால், அதை இரவு 7.30 மணிக்கு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (30.06.2023) இடம்பெற்ற கட்சித் தலைவர் கூட்டத்தின்போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பிலான விசேட நாடாளுமன்ற அமர்வு இன்று | Special Parliamentary Session Today

நாடாளுமன்ற நிலையியற் கட்டளை

அத்துடன் எதிர்வரும் 05 ஆம் திகதி புதன்கிழமை வாராந்த நாடாளுமன்ற கூட்டத்தொரை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேசிய கடன் மறுசீரமைப்பு விவகாரத்தை இந்த வாரத்துக்குள் நிறைவு செய்ய அரசாங்கம் கொள்கை ரீதியில் தீர்மானித்தது.

இதற்கமைய நாடாளுமன்றத்தை கூட்டுமாறு பிரதமர் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய நாடாளுமன்ற நிலையியற் கட்டளையின் 16 ஆவது பிரிவுக்கு அமைய நாடாளுமன்ற அமர்வை ஆரம்பிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன கடந்த நேற்று மாலை வெளியிட்டார்.

இதற்கமைவாகவே விசேட நாடாளுமன்ற அமர்வு இடம்பெறுகிறது.

தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பிலான விசேட நாடாளுமன்ற அமர்வு இன்று | Special Parliamentary Session Today

திறைசேரி வழங்கியுள்ள பிணைமுறிகள்

விசேட நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்ளுமாறு நாடாளுமன்ற செயலாளர் நாயகம் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எழுத்துமூலமாக அறிவித்துள்ளார்.

தேசிய கடன் மறுசீரமைப்பு திட்டத்துக்குள் அரச மற்றும் தனியார் வங்கி கட்டமைப்பு உள்ளடக்கப்படமாட்டாது.

57 மில்லியன் வங்கி வைப்பாளர்களின் நிதி நிலைக்கும் பாதிப்பு ஏற்படாது. அத்துடன் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் நம்பிக்கை நிதியம் என்பனவற்றின் கடன் மறுசீரமைக்கப்படும்.

ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நிதியம் ஆகியவற்றுக்கு திறைசேரி வழங்கியுள்ள பிணைமுறிகள் அனைத்தும் மீளப்பெறப்பட்டு புதிய பிணைமுறிகள் வழங்கப்படும்.

தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பிலான விசேட நாடாளுமன்ற அமர்வு இன்று | Special Parliamentary Session Today

விசேட அமைச்சரவை கூட்டம் 

ஆகவே தேசிய கடன் மறுசீரமைப்பால் வங்கி கட்டமைப்புக்கும், ஈ.பி.எப் மற்றும் ஈ.டி.எப் என்பனவற்றுக்கு பாதிப்பு ஏற்படாது என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க நாட்டு மக்களுக்கு உத்தரவாதம் வழங்கினார்.

தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பிலான தீர்மானத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டம் அனுமதி வழங்கியது.

தேசிய கடன் மறுசீரமைக்கப்படும் முறைமை தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க அமைச்சரவை அமைச்சர்களுக்கு தெளிவுப்படுத்தியுள்ளார்.

அத்துடன் தேசிய கடன் மறுசீரமைப்பு திட்ட வழிமுறைகள் தொடர்பில் உறுதியான தீர்மானம் எடுப்பதற்காக நேற்று முன்தினம்(30.06.2023) வங்கி விடுமுறை வழங்கப்பட்டது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US