வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான விசேட அறிவித்தல்
நாட்டிற்கு எவ்வித பிரச்சினையும் ஏற்படாத வகையில் விசேட வேலைத்திட்டத்தின் கீழ் வாகன இறக்குமதியை ஆரம்பிக்க நம்பிக்கை உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (10) உரையாற்றிய போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மூன்றாம் காலாண்டு
மேலும் தெரிவிக்கையில், “வாகன இறக்குமதி தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்திற்கு அறிவித்துள்ளோம்.

நாங்கள் சர்வதேச நாணய நிதியத்திடம் பேசி, ஆகஸ்ட் மாதத்திற்குப் பின், ஒரு குறிப்பிட்ட வரிசையில் பொதுப் போக்குவரத்து சேவைகள், போக்குவரத்து சேவைகள், பிற போக்குவரத்து சேவைகளுக்குப் பயன்படுத்தப்படும் சாதாரண வாகனங்கள், சொகுசு வாகனங்கள் என இறக்குமதிக்கு வேலைத்திட்டம் ஒன்றினை தயாரித்து அவர்களுக்கு வழங்கவுள்ளோம்.
இந்த குழு ஜூலை மாதம் 4ம் திகதி கூடியது, ஒரு மாதத்திற்குள், அதாவது ஆகஸ்ட் இரண்டாவது வாரத்திற்குள், நாட்டிற்கு எந்தப் பிரச்சினையும் இன்றி நாங்கள் வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும் என்று நம்புகிறோம்.
மூன்றாம் காலாண்டின் தொடக்கத்தில் இருந்து, இதுவரை பயன்படுத்தப்படும் பொது போக்குவரத்து சேவைகள், போக்குவரத்து சேவைகள் மற்றும் சாதாரண வாகனங்கள் இவற்றை ஒரு அமைப்பில் கொண்டு செல்ல உள்ளோம்“ என்றும் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
வெறிபிடித்த நபரிடமிருந்து பலரை வீரத்துடன் காப்பாற்றிய பிரித்தானியர்: சுயநினைவு திரும்பியதும் கூறிய வார்த்தை News Lankasri
மீண்டும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் வேதநாயகி... எந்த தொடர்? Cineulagam