இலங்கைக்கு பயணம் செய்ய காத்திருக்கும் சுற்றுலா பயணிகளுக்கான விசேட அறிவிப்பு
இலங்கைக்கு பயணம் செய்ய காத்திருக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு விசேட அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இணைய வழியில் இலங்கைக்கான வீசா வழங்கும் முகவர் நிறுவனங்களாக அடையாளப்படுத்திக் கொண்ட சில போலி இணைய தளங்கள் இயங்கி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு பயணம் செய்யும் போது வீசா தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரே இணைய தளம் eta.gov.lk/slvisa என்ற இணைய தளம் மட்டுமே என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியிருந்தது.
கடந்த டிசம்பர் மாதம் 1ம் திகதி தொடக்கம் 26ம் திகதி வரையில் மொத்தமாக 69941 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்தனர் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.





Quartersகு செல்வதாக செந்தில் கூறிய விஷயம், பாண்டியனின் ஷாக்கிங் பதில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு புரொமோ Cineulagam

CM சார் என்ன பழிவாங்கனுமா? என்னை என்னவேணும்னாலும் பண்ணுங்க! அதிரடியாக விஜய் வெளியிட்ட வீடியோ Cineulagam
