இரத்த தானம் செய்வோருக்கான விசேட அறிவிப்பு
கொரோனா அறிகுறிகளைக் கொண்டவர்கள், கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணியவர்கள் மற்றும் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்தவர்கள் இரத்த தானம் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தேசிய இரத்த மாற்று சேவைகளின் பணிப்பாளரான வைத்தியர் லக்ஷ்மன் எதிரிசிங்க இது குறித்து தெரிவிக்கையில்,
கொரோனா வைரஸ் இரத்தத்தால் அல்லது அதன் கூறுகளால் பரவுகிறது என்பது குறித்து அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.
எனினும் தொற்றாளர்களிடமிருந்து வைத்தியசாலை ஊழியர்களுக்கு பரவுவதைத் தடுக்கும் வகையிலேயே மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இரத்தத்தை சேகரிக்கும் போது ஐந்து தொற்று நோய்களை அடையாளம் காணும் சோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன. கடந்த ஏழு நாட்களுக்குள் கொரோனா தடுப்பூசியைப் பெற்ற நபர்களிடமிருந்து இரத்தம் சேகரிக்கப்படாது,
ஏனெனில் இந்தச் சோதனை முடிவுகளை தடுப்பூசி பாதிக்கலாம் என அவர் தெரிவித்தார். தற்போதைய சூழ்நிலையில்குருதியைச் சேகரிப்பதில் நாம் சிக்கல்களை எதிர்நோக்குகின்றோம்.
ஆகையால் அனைவரும் இரத்த தானம் செய்ய முன்வருமாறும் அவர் கோரிக்கை விடுத்தார். தேசிய இரத்த மாற்று சேவை சுகாதார சேவைகளுக்கு இடையூறு இல்லாமல் சேவைகளை வழங்கியுள்ளது.
பொது இரத்த தானம் செய்வதற்காக 24 மணிநேர ஹொட்லைன் இலக்கமானது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன் ஊடாக பொது மக்கள் அருகிலுள்ள இரத்த தான மையங்களில் இரத்த தானம் செய்ய முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய 011-5332153 மற்றும் 011-5332154 எனும் இலக்கங்களை தொடர்பு கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
