இலங்கைக்கான ஜேர்மன் தூதுவருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்குமிடையே விசேட சந்திப்பு
இலங்கைக்கான ஜேர்மன் தூதுவரான ஹோல்கர் ஸுபேர்ட், உதவி தூதுவர் ஓலாப் மல்ஷோ ஆகியோரை தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளதாக டெலோ அமைப்பின் பேச்சாளர் சுரேன் குருசுவாமி தெரிவித்துள்ளார்.
குறித்த சந்திப்பு கொழும்பில் உயர்ஸ்தானிகத்தில் இன்று முற்பகல் 10.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அவர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது 13A அடிப்படையிலான ஐ.நா தீர்மானம் முதல் மாகாணசபைத் தேர்தல் வரையிலான முக்கியமான விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இச்சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வினோ நோஹராதலிங்கம் மற்றும் பேச்சாளர் டெலோ சுரேன் குருசுவாமி ஆகியோர் கலந்து கொண்டதாகவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, தற்போதுள்ள அரசியல் சூழ்நிலைகள், ஐநா 46/1 பிரேரணை, பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப் படல், ஜி.எஸ்பி வரிச் சலுகைகள், தமிழ் மக்கள் முகம் கொடுத்திருக்க முக்கிய பிரச்சினையான காணி அபகரிப்பு, இன குடிப்பரம்பல் சிதைப்பு என்பவற்றைத் தற்காலிகமாகத் தடுத்து நிறுத்தும் முயற்சியாக ஐநா பிரேரணையில் பரிந்துரைக்கப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தை முற்று முழுதாக நிறைவேற்றுவது, மாகாணசபை தேர்தல்கள் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது.
மேலும் தமிழர்கள் ஒருமித்த நிலைப்பாட்டில் சம்பந்தப்பட்ட தரப்புகளை வலியுறுத்துவது, அதன் முக்கியத்துவம், அதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அவற்றின் முன்னேற்றம், ஆதரவு தரப்புக்கள், எதிர்கால நகர்வுகள் என்பன பற்றியும் கூட்டமைப்பு தரப்பால் விளக்கம் அளிக்கப்பட்டது.
ஐரோப்பிய ஒன்றியத்திலும் ஐரோப்பாவிலும் பிரதானியாகவும், சர்வதேச வல்லரசாகவும்,
இந்தியாவுடன் நெருங்கிய நட்பு நாடாகவும் விளங்கும் ஜேர்மனியுடனான தமிழ்
தரப்பின் மிகவும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இச்சந்திப்பு
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நடைபெற்றுள்ளது.
TNA meets German Ambassador for Sri Lanka at the Embassy today at 10.00am to discuss important matters from UN resolution to PC elections based on 13A.
— Sorrenthiran K, (@SorrenTelo) November 24, 2021
Participants were TNA MPP Selvam Adaikalanathan, Vino Noharathalingam and Suren Gurusuwamy Spokesperson TELO. pic.twitter.com/FcxT5S69EA
