யாழ்.சுன்னாகம் சம்பவம் தொடர்பாக விசேட விசாரணை!
யாழ். சுன்னாகம் (Chunnakam) பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தினை தொடர்ந்து பொலிஸார் நடந்து கொண்ட விடயம் தொடர்பில் விசேட பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம் எஸ் எம் ஜருள் தெரிவித்துள்ளார்.
சுன்னாகம் பகுதியில் நேற்றைய தினம்(09.11.2024) வான் - மோட்டார் சைக்கிள் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
அதனை தொடர்ந்து வாகன சாரதியின் சாரதி அனுமதி பத்திரத்தினை சிவில் உடையில் நின்ற பொலிஸார் பரிசோதிக்க முற்பட்ட வேளை சாரதிக்கு பொலிஸாருக்கும் இடையில் தர்க்கம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
சுன்னாகம் பொலிஸ் நிலையம்
அதனை தடுக்க சென்ற சாரதியின் மனைவியையும் பொலிஸார் தாக்கியதாகவும், அவரின் கையில் இருந்த அவர்களின் இரண்டு மாத குழந்தையை பொலிஸார் தட்டி விட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தினை அடுத்து நேற்றைய தினம் சுன்னாகம் பொலிஸ் நிலையம் முன்பாக மக்கள் கூடியமையால் பதட்டமான சூழ்நிலை காணப்பட்டது.
அந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாண பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம் எஸ் எம் ஜருள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்
“காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர் பயணித்த மோட்டார் சைக்கிளிலும், வான் ஒன்றும் காங்கேசன்துறையில் வீதியில் சுன்னாகம் சந்திக்கு அருகில் விபத்துக்கு உள்ளானது.
குற்றவியல் குற்றங்கள்
விபத்தினை அடுத்து , வாகனம் அவ்விடத்தில் இருந்து தப்பி செல்ல முற்பட்ட வேளை , சிவில் உடையில் நின்ற பொலிஸார் வாகனத்தை வழிமறித்து , சாரதியின் சாரதி அனுமதி பத்திரத்தினை கேட்டுள்ளனர்.
சிவில் உடையில் உள்ளவர்களுக்கு தான் சாரதி அனுமதி பத்திரத்தினை தர மாட்டேன் என கூறி தர்க்கப்பட்ட நிலையில் இரு தரப்பினரும் கைக்கலப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் விபத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தரும் , கைகலப்பில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரும் தெல்லிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபராக காளிங்க ஜெயசிங்க உத்தரவில் , விசேட பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
விசாரணைகளில் குற்றவியல் குற்றங்கள் கண்டறியப்பட்டால், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதேவேளை பொலிஸாரின் நடவடிக்கைகள் குறித்து ஒழுக்காற்று நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri
