தங்கம் கடத்திய நாடாளுமன்ற உறுப்பினரால் ஏற்பட்டுள்ள விளைவு: தீவிரப்படுத்தப்படும் சோதனை
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள பிரமுகர் ஓய்வறையின் ஊடாக பயணிக்கும் பயணிகளின் பயணப்பொதிகள் சுங்கத்தினால் இனிவரும் காலங்களில் அதிநவீன பரிசோதனை இயந்திரங்களை கொண்டு (ஸ்கேன்) பரிசோதனை செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமினால் கடந்த (23.05.2023)ஆம் திகதியன்று இலங்கைக்குள் தங்கம் மற்றும் கையடக்க தொலைபேசிகள் கடத்தப்பட்டதன் நேரடி விளைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முக்கிய பிரமுகர்களின் வழியாக செல்பவர்கள் அல்லது வருபவர்கள் தொடர்பில் இச்செயற்பாடானது பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலாக முழுமையான தகவல்களை உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான காலைநேர செய்திகளின் தொகுப்பு,

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிரு்நத நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan
