சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வைப்புக்களுக்கான வட்டி விகிதம்: மீண்டும் அதிகரிக்கலாம்
குறைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வைப்புக்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தை மீண்டும் அதிகரிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
உரிய வட்டி விகிதத்தைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
சிரேஷ்ட பிரஜைகளினால் வங்கிகளில் வைப்புச் செய்யப்படும் நிலையான வைப்புகளுக்கு வழங்கப்பட்டு வந்த 15% விசேட வட்டி வீத முறைமை இன்று 8% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த வட்டி வருமானத்தை சிரேஷ்ட பிரஜைகளுக்கு மீள ஒப்படைக்க வேண்டும் என பிரதமரிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.
இலட்சக்கணக்கான சிரேஷ்ட பிரஜைகளின் கோரிக்கையாக இது அமைந்திருப்பதால், உரிய வட்டி விகிதத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

சுவிட்சர்லாந்தில் இறைச்சி கூடங்களை தவிர்க்கும் 250 பண்ணைகள்: கால்நடைகளின் மன அழுத்தத்தை குறைக்குமா? News Lankasri

தோட்டத்தில் புல் வெட்டியதற்காக வெளிநாட்டவருக்கு குடியுரிமை மறுப்பு: சுவிஸ் நீதிமன்றம் அதிரடி News Lankasri
