அத்தியாவசிய சேவையை கருத்தில் கொண்டு வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி
பொதுக் கூட்டுத்தாபனம் அல்லது அரசாங்கம் வழங்கும் அத்தியாவசிய பொதுச் சேவைகளின் அவசியத்தை கருத்தில் கொண்டு விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
1979ஆம் ஆண்டு இலக்கம் 61ஆம் இலக்க பொதுச் சேவைகள் சட்டத்தின் 2ஆம் பிரிவின் பிரகாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவின் பேரில் ஜனாதிபதியின் செயலாளர் ஈ.எம்.எஸ்.பி.ஏகநாயக்கவினால் இந்த வர்த்தமானி அறிவித்த நேற்று முன் தினம் (03.12.2022) வெளியிடப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொது சேவைகள்
அதன்படி மின்சார விநியோகம், பெட்ரோலிய பொருட்கள் விநியோகம் மற்றும் எரிபொருள் ஆகியவை அத்தியாவசிய பொது சேவைகளாக கருதப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலைகள், முதியோர் இல்லங்கள், மருந்தகங்கள் மற்றும் பிற ஒத்த நிறுவனங்களில் நோயாளிகளுக்கு பராமரிப்பு, வரவேற்பு, கவனிப்பு உணவு, சிகிச்சை தொடர்பாக செய்ய வேண்டிய அனைத்து சேவை, வேலை, உழைப்பு என்பனவும் இந்த வர்த்தமானியில் சேர்க்கப்பட்டுள்ளன.

சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan