ஆபாச பிரசுரங்கள் தொடர்பில் வெளியான விசேட வர்த்தமானி
இலங்கையில் அதிரடியாக பிறப்பிக்கப்பட்ட அதிவிடேச வர்த்தகமானி அறிவித்தல்கள் ஒன்றன்பின் ஒன்றாக ரத்துச் செய்யப்பட்டு வருகிறது.
அதற்கிணங்க ஆபாச பிரசுரங்களை தடை செய்யும் சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் ஆர்வமுள்ள பல்வேறு தரப்பினர் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எனினும் சிறுவர்களின் நலன் மற்றும் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான பெண்களின் தனியுரிமையை பாதுகாப்பதற்காக இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக நீதியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சட்டத்தை உருவாக்கும் போது படைப்பாளிகளின் காப்புரிமை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமென சிவில் அமைப்புக்கள் மற்றும் ஏனைய தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 13 ஆம் நாள் மாலை திருவிழா




