மாணவர்களின் சிகை அலங்காரம் தொடர்பில் பிரதேசசபை தவிசாளர் வினோராஜ் முக்கிய தீர்மானம்
மட்டக்களப்பு - மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட சிகை அலங்கார உரிமையாளர்கள் மற்றும் வெதுப்பக உரிமையாளர்களுக்குமிடையிலான விசேட கலந்துரையாடல் கூட்டமொன்று நடைபெற்றுள்ளது.
இந்த கூட்டமானது, இன்றைய தினம்(13.01.2026) களுதாவளையில் அமைந்துள்ள பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
அத்துடன், குறித்த கலந்துரையாடல் கூட்டத்தில், சுகாதாரம், மாணவர்கள் ஒழுக்கம், சமூகத்தினரின் பாதுகாப்பு மற்றும் மக்கள் நலன் ஆகிய விடயங்களை கவனத்தில் கொண்டு, சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
விசேட தீர்மானங்கள்
இதன்படி, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட சிகை அலங்கார நிலையங்களில் பாடசாலை மாணவர்களுக்கு ஏற்ற வகையில், சிகை அலங்காரம் செய்ய வேண்டும், சிகை அலங்காரம் செய்யும் போது சுகாதார நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டும் உள்ளிட்ட சிகை அலங்காரம் பற்றிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

வெதுப்பக பொருட்கள் உற்பத்தியாளர்கள் தொடர்பில் பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன.
வெதுப்பக உணவுப் பொருட்களை கிராமங்கள் தோறும் முச்சக்கர வண்டியில் கொண்டு சென்று விற்பனை செய்யும் போது ஒருவர் மாத்திரமே பயணம் செய்ய வேண்டும். அந்த முச்சக்கர வண்டியின் வேகம் 15கிலோமீற்றர் வேகத்தில் பயணம் செய்ய வேண்டும்.
20 வயதிற்கு மேற்பட்டவர்களை மாத்திரமே முச்சக்கர வண்டியை செலுத்துவதற்கு அனுமதித்தல், அவ்வாறு செல்லும் சாரதிகள், சுத்தம், சுகாதாரத்தைக் அவசியம் கடைப்பிடிக்க வேண்டும்.

ஒரு இறாத்தல் பாண் 140ரூபாவிற்கு விற்பனை செய்தல்.
முச்சக்கர வண்டிகளில் வெதுப்பக பொருட்கள் வைத்து விற்பனை செய்பவர்கள் ஒருவருக்கொருவர் முரண்படாமல் செயற்படல் வேண்டும். அத்துடன், இது போன்று முச்சக்க வண்டிகளில் விற்பனைகளில் ஈடுபடுபவர்கள் சிறுவர்கள், பெண்கள், பாடசாலை மாணவர்கள் ஆகியவர்களிடம் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
இந்த நடைமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக பிரதேச சபையினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக இதன்போது கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், கூட்டத்தில், பிரதித் தவிசாளர் வசீகரன், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், சிறுவர் நன்னடத்தை உத்தியோகஸ்த்தல்கள், பிரதேச சபை அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.


சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 1 மணி நேரம் முன்
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri