ஊழல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் தேவை! ஜனாதிபதியிடம் மனோ எம்.பி. கோரிக்கை
இலங்கையில் ஊழல் தொடர்பான வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றங்களை நிறுவுவதை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க(Anura Kumara Dissanayake) பரிசீலிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்(Mano Ganesan) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மனோ கணேசன் தனது எக்ஸ்(x) பக்கத்தில் வெளியிட்ட பதிவிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஊழலுக்கு எதிரான முயற்சி
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
The #Police,#Bribery Commission, #AG and #Judiciary are institutions that the people place their trust in, in a republican democracy.
— Mano Ganesan (@ManoGanesan) January 20, 2025
It's good news that President #AnuraKumara_Dissanayake @anuradisanayake has stated that the Bribery Commission will reopen files of national… pic.twitter.com/YXf83hSLGk
"ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் ஊழலுக்கு எதிரான முயற்சிகளை வரவேற்கின்றேன். பொலிஸ், இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, சட்டமா அதிபர் மற்றும் நீதித்துறை ஆகியவை குடியரசு ஜனநாயக நாட்டில் மக்கள் நம்பிக்கை வைக்கும் நிறுவனங்களாகும்.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கோப்புகளை இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு மீண்டும் திறந்து, இம்மாத இறுதியிலும் பெப்ரவரியிலும் வழக்குகளைத் தாக்கல் செய்யும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்திருப்பது மகிழ்ச்சியான செய்தியாகும்.
சிறப்பு நீதிமன்றம்
இலஞ்ச ஆணைக்குழுவுக்கு (அதன் சட்ட அதிகாரங்களை வலுப்படுத்துதல் உட்பட) சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் பொலிஸ் திணைக்களத்தில் உள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அதிக ஆதாரங்களை வழங்குவதன் மூலம் தேக்கநிலையை நீக்க வேண்டும்.
மேலும் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையை நிறைவேற்றுவதற்கு அதிக ஆதாரங்களை வழங்க வேண்டும். அதேவேளை, ஊழல் தொடர்பான வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றங்களை நிறுவுவதையும் ஜனாதிபதி பரிசீலிக்க வேண்டும், இதனால் வழக்குகள் தினசரி அடிப்படையில் விசாரிக்கப்பட்டு முடிவுகளை நோக்கிச் செல்லும்" என குறிப்பிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |