முல்லைத்தீவில் இடம்பெற்ற மக்கள் மேடை நிகழ்வு
முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தில் தூய அரசியலுக்காக ஒன்றிணைவோம் எனும் தொனிப் பொருளில் மக்கள் மேடை எனும் நிகழ்வொன்று நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது, நேற்று (29.05.2024) இலங்கை செஞ்சிலுவை சங்க மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள் அடங்கலாக அரசியல் பிரமுகர்களையும் மக்களையும் ஒன்றிணைக்கும் மேடை நிகழ்வு நாடெங்கும் மார்ச் 12 அமைப்பினரால் நடத்தப்பட்டு வருகின்றது.
கலந்து கொண்டோர்
இதற்கமைய, 22ஆவது மாவட்டமாக முல்லைத்தீவு மாவட்டத்திலும் அரசியல் பிரமுகர்களையும் மக்களையும் ஒன்றிணைக்கும் நோக்கில் குறித்த மக்கள் மேடை நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.
இதில், முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள 6 கட்சிகளது பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளதுடன் எந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் கலந்து கொள்ளாமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |