சித்திரை புத்தாண்டு முன்னிட்டு மட்டக்களப்பில் விசேட ஏற்பாடுகள்!
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு மட்டக்களப்பு மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட உற்சாகமாக தயாராகி வருவது அவதானிக்கப்படுகிறது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், போக்குவரத்து பொலிஸார் கடமையில் ஈடுபட்டிருப்பதும் காணப்படுகின்றது என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
புத்தாண்டுக்கான கொள்வனவுகள் அதிகரிப்பு
வீதி விபத்துகளைத் தடுக்கும் நோக்கிலும், பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாவட்டத்தின் நகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பொதுமக்கள் பல பகுதிகளிலிருந்து திரண்டு வந்து, சித்திரை புத்தாண்டுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்து வருவது காணப்படுகிறது.
மேலும், பொதுமக்களுக்கு தேவையான போக்குவரத்து வசதிகளை மாவட்ட அரசாங்க அதிபரின் பணிப்புரைக்கிணங்க, இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.



21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri
விவாகரத்து வழக்கில் ட்விஸ்ட்.. கண்கலங்கி அழுத ரோகிணி.. அதிர்ச்சியில் மனோஜ், விஜயா! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
தங்கமயில் கர்ப்பமாக இருப்பதை அறியும் பாண்டியன் குடும்பம்.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புரோமோ Cineulagam