லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு
பண்டிகைக் காலத்தையொட்டி டிசம்பர் மாதத்திற்காக 34,000 மெற்றிக்தொன் சமையல் எரிவாயு ஓடர் செய்யப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன் ஒரு தொகுதி எதிர்வரும் வியாழக்கிழமை நாட்டை வந்தடையுமென எதிர்பார்க்கப்படுவதாகவும், ஜனவரி வரை பல கப்பல்கள் நாட்டை வந்தடையுமெனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும்,4000 மெற்றிக்தொன் எரிவாயுவை ஏற்றிய இரு கப்பல்கள் எதிர்வரும் 30ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளதாகவும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு
மேலும் பல எரிவாயுக் கப்பல்கள் நாட்டை வந்தடைந்ததும் அதனை கப்பலிலிருந்து இறக்கும் நடவடிக்கைகள் நிறைவடைந்த உடன் வழமைபோன்று சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம் சமையல் எரிவாயுவை சந்தைக்கு விநியோகிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, எதிர்வரும் புதன்கிழமை வரை சமையல் எரிவாயுவை சந்தைக்கு விநியோகிக்கும் நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் எரிவாயு சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையினால் சிறு விற்பனையாளர்களுக்கு கடன் அடிப்படையில் சிலிண்டர்களை வழங்குமாறு லிட்ரோ நிறுவனம் விநியோகஸ்தர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
சோழன் - நிலா சேர்ந்து வாழவில்லை.. சேரன் எடுத்து அதிர்ச்சி முடிவு.. அய்யனார் துணை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
ஐக்கிய அரபு அமீரகம் மீது பாய்ந்த ஈரானின் 137 ஏவுகணைகள், 209 ட்ரோன்கள்: மத்திய கிழக்கில் பதற்றம் News Lankasri