யாழ்.மாவட்ட முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான விசேட அறிவிப்பு
யாழில் முச்சக்கர வண்டிகளிற்கு கட்டணமானி (டக்சி மீற்றர்) பொருத்தப்பட்டு, பொலிஸாரால் ஸ்டிக்கர் ஒட்டப்படுதல் வேண்டும் என யாழ்.மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
சட்ட நடவடிக்கை
எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முதல் கட்டணமானி பொருத்தப்பட வேண்டிய முச்சக்கர வண்டி சாரதிகள் அதனை பொருத்த வேண்டும்.
இதன்படி 20,21,22 ஆகிய திகதிகளில் பொலிஸாரினால் ஸ்டிக்கர்கள் ஒட்டப்படும். அதன் பின்னர் சாரதிகள் சட்டபூர்வமாக முச்சக்கர வண்டி தரிப்பு நிலையங்களில் முச்சக்கர வண்டிகளை செலுத்துவதற்கு சந்தர்ப்பங்கள் வழங்கப்படும்.இதனை மீறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
எனவே நாளைய தினம் முச்சக்கரவண்டி தரிப்பிடங்களுக்குச் சென்று, முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு இந்த விடயத்தினை தெளிவுப்படுத்தி எதிர்வரும் 20ஆம் திகதிக்கு பின்னர் கட்டணமானியை சட்டபூர்வமாக நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
you my like this video

7 அறைகள் முதல் உடற்பயிற்சி கூடம் வரை.., சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள வசதிகள் என்னென்ன? News Lankasri

எதிர்நீச்சல் சீரியலில் ரீ-என்ட்ரி கொடுத்த இன்னொரு பிரபலம்.. யார் பாருங்க, இனி தெறிக்க போகுது Cineulagam
