விற்பனைக்கு விடப்பட்டுள்ள கிராமம்
ஸ்பெயின் நாட்டில் கைவிடப்பட்ட மக்கள் வசிக்காத கிராம் ஒன்று 2 லட்சத்து 27 ஆயிரம் பவுண்ட்களுக்கு விற்பனைக்கு விடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
வடமேற்கு ஸ்பெயினில் சால்டோ டி காஸ்ட்ரோ என்ற இடத்தில் இந்த கிராம் காணப்படுகிறது. ஸ்பெயினின் போர்ச்சுகல் எல்லைக்கு அருகில் உள்ள ஜமோரா மாகாணத்தில் உள்ள மலை உச்சியில் 65,000 சதுர அடி பரப்பளவில் இந்த கிராமம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
கிராமத்தில் 44 வீடுகள் இருப்பதுடன் எவரும் வசிப்பதில்லை
NewsHub
44 வீடுகள், உணவகம், தேவாலயம், பாடசாலை, நகர நீச்சல் தடாகம் ஆகிய அமைந்துள்ள இந்த கிராம் கடந்த 1980 ஆம் ஆண்டு முதல் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுவதுடன் அந்த கிராமத்தில் எவரும் வசிப்பதில்லை.
கிராமத்திற்கு அருகில் நீர்த்தேக்கம் ஒன்றை நிர்மாணிப்பதற்காக 1950 ஆம் ஆண்டு இந்த கிராமத்தில் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் அவற்றில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளில் ஊழியர்கள் தங்கி இருந்தனர்.
1980 ஆம் ஆண்டு நீர்த்தேக்கம் நிர்மாணிக்கப்பட்ட பின்னர், அங்கு வசித்து வந்த ஊழியர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
சுற்றுலா கிராமத்தை உருவாக்க ஏற்கனவே ஒருவர் கொள்வனவு செய்தார்
OlivePress
இந்த நிலையில், 2000 ஆம் ஆண்டு ஒருவர் சுற்றுலா கிராமமாக பயன்படுத்த அதனை கொள்வனவு செய்துள்ளார்.
எனினும் அந்த முயற்சி தோல்வியடைந்துள்ளது.
இந்த நிலையில் தற்போது 2 லட்சத்து 27 ஆயிரம் பவுண்ட்களுக்கு கிராமம் விலைக்கு விற்பனைக்கு விடப்பட்டுள்ளது.