தமிழ் மக்களை ஏமாற்றிய தென்பகுதி சிங்கள வேட்பாளர்கள் : சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிப்பு
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களை எளிதில் ஏமாற்றி விடலாம் என்ற பேச்சுக்கள் எடுபட மாட்டாது என ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
நான் ஒரு விடயத்தை தெளிவாக கூற விரும்புகிறேன் தமிழ் தரப்பிலிருந்து பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பில் கடந்த 6 மாதமாக பேசப்பட்ட பின் முக்கியமாக வடக்கு, கிழக்கை நோக்கிய வருகை தருபவர்கள் இங்கு கொடுக்கின்ற வாக்குறுதிகளை நாங்கள் பார்க்கின்றோம்.
கடந்த வருடங்களில் இவ்வாறு அவர்கள் வடக்கை நோக்கி வரவில்லை. இந்த வருடம் நாங்கள் பொது வேட்பாளரை நிறுத்தப் போகிறோம் என்று கூறிய பிறகே வடக்கை நோக்கி வருகிறார்கள்.
தேர்தலுக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கு முன்பாகவே யாழ்ப்பாணத்தில் எங்கு பார்த்தாலும் அநாமதேய சுவரொட்டிகள் முளைக்கத் தொடங்கி விட்டன.
யார் எதை செய்தாலும் நாங்கள் ஒரு விடயத்தை தெளிவாக கூறுகிறோம். வடக்கு, கிழக்கு மக்கள் இவர்கள் பற்றி மிக தெளிவான சிந்தனைகளை கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தமிழ் பொது வேட்பாளர் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |