இலங்கையருக்காக குரல் கொடுத்த தென்கொரிய ஜனாதிபதி
தென்கொரியாவில் இலங்கை தொழிலாளர் ஒருவர் சக தொழிலாளர்களால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், குறித்த சித்திவதை சம்பவம் தொடர்பில் தென்கொரிய ஜனாதிபதி உடனடியான நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஜியோல்லாவின் நஜு என்ற நகரில் உள்ள ஒரு செங்கல் தொழிற்சாலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மனித உரிமை மீறல்
புதிய ஊழியர் ஒருவருக்கு பணியை சரியாக கற்றுக்கொடுக்கவில்லை என்பதற்காக ஏனைய ஊழியர்களால் இலங்கையின் ஊழியர் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இது தொடர்பான காணொளி அதிகமாக பகிரப்பட்டதை அடுத்து, தென்கொரிய ஜனாதிபதி இந்த விடயத்தில் நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளார்.
எந்தவொரு மனித உரிமை மீறலுக்கும் தமது நாட்டில் இடமில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




