தென்னிந்திய திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவின் உடல்நிலை குறித்து வெளியாகியுள்ள தகவல்
தென்னிந்திய திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் தற்போது இயக்குநர் பாரதிராஜாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவ வல்லுநர்களால் கண்காணிப்பட்டு வருவதாகவும், அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இயக்குநர் பாரதிராஜாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனை நிர்வாக அறிக்கை
இதனையடுத்து சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
பின்னர், குடும்பத்தினர் ஆலோசனைப்படி சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு இயக்குநர் பாரதிராஜா மாற்றப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், இயக்குநர் பாரதிராஜா உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், ''கடந்த 26-ம் தேதி மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ள பாரதிராஜாவின் உடல்நிலை முன்னேற்றம் கண்டுவருகிறது. தீவிர
சிகிச்சை பிரிவில் இருக்கும் அவருக்கு சிறப்பு மருத்துவக் குழு சிகிச்சை
அளித்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
