இலங்கை விவசாய சேவை உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்களுக்கு விரைவில் நியமனம்
வடக்கு மாகாண விவசாய அமைச்சின் கீழ் காணப்படும் இலங்கை விவசாய சேவை உத்தியோகஸ்தர்களுக்கான வெற்றிடங்கள் ( தரம் 1, தரம்2, தரம்3) விரைவில் நிரப்பப்படவுள்ளன.
வடமாகாண பிரதம செயலாளர் எஸ்.எம்.சமன் பந்துல சேனா இதற்கான துரித நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார்.
வடக்கு மாகாணத்தல் கிடைக்கப்பெறும் விண்ணப்பஙகளின் அடிப்படையில் இலங்கை விவசாய சேவை உத்தயோகஸ்தர்கள் தரம் 111 இல் 14 வெற்றிடஙகளும், தரம் 11 இல் 5 வெற்றிடங்களும், தரம் 1 இல் 1 வெற்றிடமுமாக மொத்தம் 20 வெற்றிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
விண்ணப்பதாரர் சுயமாக தயாரிக்கப்பட்ட விண்ணப்பங்களை எதிர்வரும் 7.02.2022 க்க முன்னர் அனுப்பிவைக்குமாறு வடக்கு மாகாண பிரதம செயலாளர் கோரியுள்ளார்.
மேற்படி வெற்றிடங்கள் நேர்முக பரீட்சை புள்ளியடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமனம் செய்யப்படவுள்ளனர்.

மகளை திருமணம் செய்து கொடுத்து விட்டு ராதிகாவுடன் கூட்டு சேர்ந்த பாக்கியா- மீண்டும் வருவாரா? Manithan

காவேரியின் கர்ப்பத்தை விஜய் அறியும் உணர்வு பூர்வமான தருணம்.. மகாநதி சீரியல் எமோஷ்னல் புரொமோ Cineulagam
