ஆன்மீகத்தில் ஈடுபாடு குறைந்து செல்கின்றது! வடக்கு ஆளுநர் தெரிவிப்பு
ஆன்மீகத்தில் ஈடுபாடு குறைந்து செல்வது மாத்திரமல்லாது ஆன்மீகத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பது கூட குறைந்துள்ளது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
நல்லூர் சைவத்தமிழ் பண்பாட்டுக் கலைக்கூடல் அமைப்பின் பரிசளிப்பு நிகழ்வும் ஆண்டு விழாவும், நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனத்தில் நேற்று (23) நடைபெற்ற போதே ஆளுநர் இவ்வாறு குறிப்பிட்டார்.
எந்தவொரு விடயம் அழிக்கப்படுகின்றதோ அல்லது கால ஓட்டத்தில் மறைந்து செல்கின்றதோ அதைத்தக்க வைப்பதற்கும் அடுத்த சந்ததிக்கு ஒப்படைப்பதற்காகவும் தான் தினங்கள், அமைப்புக்கள் உருவாக்கப்படுகின்றன.
பாராட்டு
ஆன்மீகம் வாழ்வியலுக்குத் தேவை. இன்று நல்லூர் சைவத்தமிழ் பண்பாட்டு கலைக்கூடம் செய்துள்ள பணி பாராட்டுக்குரியது.
5 ஆண்டுகளாக அவர்கள் இதைச் செய்து வருகின்றார்கள். இளம் பிள்ளைகளை இதில் அதிகளவு ஈடுபடுத்தி ஊக்கப்படுத்தியிருக்கின்றார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
நிகழ்வில் ஆசி இயம்பல் வழங்கிய கலாநிதி ஆறு.திருமுருகன் தனதுரையில், நல்லூர் கந்தசுவாமி ஆலயப் பெருந்திருவிழா சிறப்பாக நடைபெற்று முடிந்திருக்கின்றது.
அபசகுணமான செயற்பாடு
ஆலயச் சூழலுக்கு மணல் பெற்றுக்கொள்வதை சிலர் தடுத்திருக்கின்றார்கள்.வேதனையான விடயம். எதிர்காலத்தில் மணல் வழங்கமாட்டோம் என்று பிரதேச சபை தீர்மானம் நிறைவேற்றியிருக்கின்றது.
நல்லூரானுக்கு மணல் வழங்காமல் இருப்பதற்கு தமிழ் மண்ணிலுள்ள தமிழர்களின் பிரதேச சபை தீர்மானித்திருக்கின்றது. இது ஓர் அபசகுணமான செயற்பாடு. எல்லாவற்றையும் நல்லூரான் பார்த்துக் கொள்வான் என்று குறிப்பிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 நாட்கள் முன்

3000 கி.மீ தூர இலக்கை தாக்கும் புதிய ஏவுகணை: உக்ரைன் கையில் கிடைத்த பயங்கர ஆயுதம்! நடுக்கத்தில் ரஷ்யா News Lankasri
