மலையக தொடருந்து பாதைகளின் இன்றைய அவல நிலைமை!
'டித்வா' சூறாவளியால் மலையக தொடருந்து சேவைகள் நிறுத்தப்பட்டு பல மாதங்கள் கடந்த நிலையில் பாதைகள் தென்படாத வகையில் காடுகள் வளர்ந்து சீர்குலைந்து காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
'டித்வா' சூறாவளியால் ஏற்பட்ட மண்சரிவால் தொடருந்து பாதைகள் மண்ணில் மூடப்பட்டு மற்றும் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளதால் தொடருந்து சேவைகளை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
மந்தகதியில் சீரமைக்கும் பணிகள்
இருப்பினும், அம்பேவெல மற்றும் பதுளை சேவையும் , நாவலப்பிட்டி மற்றும் வட்டவளை தொடருந்து சேவைகள் நடைபெறுகின்றன.
தொடருந்து பொறியியலாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் தற்போது ரம்புக்களை முதல் நாவலப்பிட்டி வரையிலும், அம்பேவெல முதல் நானுஓயா வரையிலும் உள்ள தொடருந்து பாதைகளை சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மலையகத்திற்கான பிரதான தொடருந்து சேவை 75 நாட்களுக்கும் மேலாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தொடருந்தை மட்டுமே போக்குவரத்துக்கு பயன்படுத்தும் கிராமங்களில் வசிக்கும் மக்கள் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

தங்கள் அன்றாட வருமானத்தில் பெரும் பகுதி போக்குவரத்திற்காக செலவிடுவதாகவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
நானுஓயாவிலிருந்து அம்பேவெல வரையிலான தொடருந்து பாதை புனரமைக்கப்பட்ட பின்னர், நானுஓயாவில் நிறுத்தப்பட்டுள்ள என்ஜின்களை நானுஓயா மற்றும் பதுளை இடையேயான தொடருந்து சேவையை இயக்க பயன்படுத்தலாம் என்று நானுஓயா கட்டுப்பாட்டு அறையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
லண்டன் பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல்: 2 மாணவர்கள் நிலை கவலைக்கிடம்: 13 வயது சிறுவன் கைது News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் நடிகைக்கும், இந்த பிரபலத்திற்கும் மறுமணமா?... வெளிவந்த தகவல் Cineulagam
மனைவியை பிரிந்ததில் சந்தோஷம் தான்... இரண்டாம் திருமணம் குறித்து நடிகர் பார்த்தீபன் ஓபன் டாக்! Manithan