தமிழர்களின் தீர்வுக்கு இதுவே அரிய சந்தர்ப்பம்! தவறவிட வேண்டாம்: பிரதமர் வலியுறுத்து
"தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதற்கு இது அரிய சந்தர்ப்பம் எனவும், கிடைத்த அரிய சந்தர்ப்பத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உள்ளிட்ட தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள் தவறவிடக்கூடாது" என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
'தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு புதிய அரசமைப்பு மூலம் கிடைக்கும். ஒரு வருடத்துக்குள் இந்தப் பணிகள் முற்றுப்பெற வேண்டும் என்பதே தனது நோக்கம்' என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்த நிலையில் பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு
"புதிய அரசமைப்பு, தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் ஜனாதிபதி திறந்த மனதுடன் அனைவருடனும் பேச ஆரம்பித்துள்ளார்.
எனவே, தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள் கட்சி, பேதமின்றி மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட வேண்டும்.
புதிய அரசமைப்பு
காலத்தை இழுத்தடிக்காமல் புதிய அரசமைப்பு மூலம் தேசிய பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காண்பதுதான் ஜனாதிபதியின் விருப்பம்.
அதனால்தான் ஒரு வருடத்துக்குள் தீர்வுக்கான பணிகள் நிறைவுபெற வேண்டும் என்ற கால வரையறையை ஜனாதிபதி விதித்துள்ளார்" என்றார்.
May you like this Video
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)
தையிட்டி விகாரை : என்ன செய்யலாம் 3 நாட்கள் முன்
![3வது முறையாக கர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகர் மனைவி.. கோலாகலமாக நடந்த சீமந்தம், போட்டோஸ் இதோ](https://cdn.ibcstack.com/article/0f12e7dd-4f06-4f16-9cff-9dcc24c47c7e/25-67ac877857c80-sm.webp)
3வது முறையாக கர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகர் மனைவி.. கோலாகலமாக நடந்த சீமந்தம், போட்டோஸ் இதோ Cineulagam
![ஒருமுறை சார்ஜ் செய்தால் 248 கிமீ மைலேஜ்.! Simple One-ன் Gen 1.5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்](https://cdn.ibcstack.com/article/423ae66b-1bac-45b7-8142-cac56bc06596/25-67aca2573815f-sm.webp)
ஒருமுறை சார்ஜ் செய்தால் 248 கிமீ மைலேஜ்.! Simple One-ன் Gen 1.5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் News Lankasri
![புதுத்தொழில் தொடங்கிய முத்து.. வயிற்றெரிச்சலில் விஜயா செய்த காரியம்! சிறகடிக்க ஆசை ப்ரோமோ](https://cdn.ibcstack.com/article/f581024d-b018-48eb-acc5-84414573be7c/25-67acb61f83461-sm.webp)