இலங்கை தொடருந்து நிலையங்களில் ஏற்படவுள்ள மாற்றம்
இலங்கை தொடருந்து திணைக்களத்திற்கு சொந்தமான தொடருந்து நிலையங்கள் மற்றும் கட்டடங்களின் கூரைகளில் சூரிய மின்கலங்களை பொருத்தி சூரியசக்தி மூலம் மின்னுற்பத்தியை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சூரிய மின்கலங்கள்
தொடருந்து திணைக்களத்திற்கு சொந்தமான 300 இற்கும் அதிகமான தொடருந்து நிலையங்கள் காணப்படுகின்றன.

குறித்த தொடருந்து நிலையங்கள் மற்றும் கட்டடங்களின் கூரைகளில் சூரிய மின்கலங்களை பொருத்தி சூரியசக்தி மூலம் மின்னுற்பத்தியை ஆரம்பிப்பது மிகவும் பொருத்தமானதென அடையாளங் காணப்பட்டுள்ளது.
இதற்கமைய, அரச தனியார் பங்குடமை முறையில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
T20 போட்டியில் 188 ஓட்டங்கள் விளாசிய பிரிட்டோரியஸ்; கெயிலின் 13 வருட சாதனை முறியடிப்பு News Lankasri