சமூக ஊடகங்கள் மூலம் சிறுவர்கள் பகிரங்கப்படுத்தல்! முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
சமூக ஊடகங்கள் மூலம் பல்வேறு சம்பவங்களினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட சிறுவர்கள் வெளிப்படுத்தப்படுவதை தடுக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்கள் மூலம் சிறுவர்கள் பகிரங்கப்படுத்தப்படுவதால், பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக சிறுவர்களுக்கான நாடாளுமன்ற பேரவையின் தலைவர் ரோகினி குமாரி விஜேரத்ன தெரிவித்தார்.
அண்மையில் இடம்பெற்ற சிறுவர்களுக்கான நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் இது பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது.
சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்
இதன்போது ஊடகங்கள், குறிப்பாக சிறுவர்களின் அடையாளங்களை பகிரங்கப்படுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.
இந்தநிலையில் இது சிறுவர் துஷ்பிரயோகம் சம்பந்தப்பட்ட சிறுவர்களின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக ரோகினி குமாரி விஜேரத்ன சுட்டிக்காட்டினார்.
மேலும் சிறுவர் சந்தேக நபர்களை சிறு குற்றங்களுக்காக சமரச சபைக்கு பரிந்துரை
செய்தல் தொடர்பிலும் இந்த கூட்டத்தின்போது ஆராயப்பட்டது. மாற்று தண்டனையாக,
சீர்திருத்தத்தை பயன்படுத்தவும் இந்தக் கூட்டத்தில் இணக்கம் வெளியிடப்பட்டது

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri
