பிரதேச சபை தவிசாளர் மீது சமூக வலைத்தள அவதூறு : பொலிஸில் முறைப்பாடு
கடந்த மூன்று நாட்களாக சமூக வலைத்தளங்கள் மற்றும் வட்ஸ்சப் குழுக்கள் வழியாக உண்மைக்கு புறம்பான, அவதூறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக தெரிவித்து புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் வே. கரிகாலன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
இவ்வாறான தவறான தகவல்களை பரப்பி வரும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் அவர் முறைப்பாடு அளித்துள்ளார்.
மேலதிக விசாரணை
மேலும் மக்கள் மத்தியில் இருந்து தன்னை அகற்றும் நோக்கில் திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்படும் பொய் பிரச்சாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ஈரானுக்கு எதிராக அதிநவீன லேசர் தொழில்நுட்பம்: மாற்று திட்டத்தை கையில் எடுத்த அமெரிக்கா News Lankasri
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri