ஹட்டனில் நடைபெறவுள்ள ஸ்மார்ட் யூத் கண்காட்சி
தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் ஸ்மார்ட் யூத் கண்காட்சி 2024 (SMART YOUTH -EXEPITION) நாளை மறுதினம் (15.07.2024 ) மாலை, ஹட்டன் டன்பார் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னான்டோ அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் ஏற்பாட்டில், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் இந்த நிகழ்வானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அனுமதி இலவசம்
இதில் தென்னிந்திய பிரபல பாடகர்களால் வழங்கப்படவுள்ள இன்னிசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இதற்கான் அனுமதி முற்றிலும் இலவசம் என ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.