இரணைமடுக் குளத்தின் கீழான சிறுபோக செய்கையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் : முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள்

Kilinochchi Sri Lankan Peoples Northern Province of Sri Lanka
By Sudaron Aug 02, 2024 01:21 AM GMT
Report

கிளிநொச்சி(Kilinochchi) இரணைமடுக் குளத்தின் கீழான 2024 சிறுபோக செய்கையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் முன்வைத்த முறைப்பாடுகளுக்கு அமைவாக மாவட்ட செயலகத்தால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி இரணை மடுக்குளத்தின் கீழ் இவ்வாண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள சிறுபோக செய்கையில் குறிப்பிட்ட சில விவசாய அமைப்புகள் ஒதுக்கீட்டு பிரதேசத்துக்கு மேலதிகமாக பயிர்செய்கை மேற்கொண்டுள்ளதாகவும் இதனால் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து கடந்த 23ஆம் திகதி மாவட்ட அரச அதிபருக்கு பாதிக்கப்பட்ட விவசாயிகளால் மனு ஒன்று கையளிக்கப்பட்டிருந்தது.

இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ள பெருந்தொகை டொலர் வருமானம்: மத்திய வங்கி தகவல்

இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ள பெருந்தொகை டொலர் வருமானம்: மத்திய வங்கி தகவல்

கள ஆய்வுகள்

இதனை அடுத்து மாவட்ட விவசாய திணைக்களம் மற்றும் மாவட்ட பதில் அரச அதிபர் உள்ளிட்வர்களை கொண்டு மாவட்ட அரச அதிபரால் அதற்கான குழு ஒன்று நியமிக்கப்பட்டு அது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த விவசாயிகளால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பிரதேசங்களில் மேலதிக பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் கடந்த செவ்வாய்கிழமை முதல் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இரணைமடுக் குளத்தின் கீழான சிறுபோக செய்கையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் : முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் | Small Scale Operation Kilinochchi Iranimadu Lake

இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி புலிங்க தேவன்முறிப்பு சின்னக்காடு உள்ளிட்ட குறித்த பிரதேசங்களில் பயிர்செய்கை கூட்டத்தினை மீறி அதிகளவான ஏக்கர் நிலப்பரப்பு பயிர்செய்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை கண்டாவளை மற்றும் கிளிநொச்சி கமநல சேவைத் திணைக்களங்களால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

அதாவது இரணை மடுக்குளத்தினுடைய முழுமையான நீர்மட்டம் 36 அடியாகும் பெரும் போகம் நிறைவு பெற்றதையடுத்து 2024ஆம் ஆண்டுக்கான சிறுபோக குழு கூட்டம் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இதன் போது குளத்தின் நீர்மட்டம் 35 அடி ஒரு அங்குலமாக காணப்பட்டது.

இதன்படி நீரின் அளவை வைத்து இருபதாயிரம் ஏக்கரிலும் நூறுவீதமான நெற்செய்கை முன்னெடுக்க முடியும் என விவசாயிகளால் சுட்டிக்காட்டப்பட்ட போதும் நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகளும் தொடர்ச்சியாக பங்கு மோசடிகளில் ஈடுபடுபவர்களும் இணைந்து அதன்அளவை மட்டுப்படுத்தி 15750 ஏக்கராக தீர்மாணித்து விட்டு மேற்குறித்த அமைப்புகள் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அளவுகளை விட மேலதிகமான பயிர்செய்கைகளை மேற்கொண்டுள்ளன.

ஞானசார தேரர் உள்ளிட்ட குழுவினர் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

ஞானசார தேரர் உள்ளிட்ட குழுவினர் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

அரசியல் தலையீடு

ஆனாலும் இரணைமடு குளத்தின் கீழ் குளத்தின் கீழ் உள்வாங்கப்படாத மானாவாரி பிரதேசங்களாக காணப்படுகின்ற கோரக்கண்கட்டு பகுதி விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்திற்கான பங்குரிமைகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்த போதும் அதற்கான அனுமதிகளை வழங்காது ஒரு சில அமைப்புகள் மாத்திரமே தன்னிச்சையான செயற்பாட்டில் ஈடுபட்டிருக்கின்றன.

இரணைமடுக் குளத்தின் கீழான சிறுபோக செய்கையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் : முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் | Small Scale Operation Kilinochchi Iranimadu Lake

கடந்த 2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற மோசடி தொடர்பாகவும் 2023 ஆம் ஆண்டு இடம்பெற்ற மோசடிகள் தொடர்பாகவும் மாவட்ட மாவட்ட உயர் அதிகாரிகளை கொண்டு விசாரணை குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகள் முயற்சித்த போதும் ஒரு கட்சி சார்ந்த அரசியல் தலையீடு காரணமாக அதிகாரிகளுக்கு அழுத்தம் காரணமாக அச்செயற்பாடுகள் கைவிடப்பட்டன.

இவ்வாறான செயற்பாடுகளால் கிளிநொச்சி மாவட்டத்தில் ஏராளமான விவசாயிகள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகின்றமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் பிறந்தநாள் கொண்டாடிய ரம்பா கணவர்

யாழ்ப்பாணத்தில் பிறந்தநாள் கொண்டாடிய ரம்பா கணவர்

நாட்டிலுள்ள முக்கியஸ்தர்களின் சொத்து விபரங்கள் பகிரங்கம்

நாட்டிலுள்ள முக்கியஸ்தர்களின் சொத்து விபரங்கள் பகிரங்கம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US