கடற்றொழிலாளர் பிரச்சனைக்கு சிறு குழுக்களால் தீர்வு காண முடியாது: எழுந்துள்ள கண்டனம்
சிறு குழுக்களுடன் பேசி இலங்கை - இந்திய கடற்றொழிலாளர் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது என கிராமிய அமைப்புகளின் தலைவர் நற்குணம் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட கடை தொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசத்தில் இன்று(27.03.2025) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“கடற்றொழிலாளர்கள் பிரச்சனை தொடர்பில் பேசுவதாயின் சங்கங்கள், சமாசங்கள், சம்மேளனம், கிராமிய அமைப்புகள் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் போன்ற அமைப்புக்கள் உள்ளன.
கண்டனம்
அவ்வாறு கலந்துரையாடாமல் தெற்கு அமைப்பில் அங்கம் வகிக்கும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிலரை அங்கத்தவர்கள் எனக்கூறி அவர்களுடன் கலந்துரையாடி கடற்றொழிலாளர் சமூகத்தின் பிரச்சனையை தீர்க்க முடியாது.

இந்தியா இழுவைப் படகுகளினால் எமது வடபகுதி கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் தொடர்ச்சியாக அழிக்கப்பட்டு வரும் நிலையில், பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்சனைகளை தீர்ப்பதே எமது விருப்பம்.
அதை விடுத்து இந்திய கடற்றொழிலாளர்களையும் வடபகுதி கடற்றொழிலாளர்களையும் ஏமாற்றும் முகமாக வவுனியாவில் இடம் பெற்ற பேச்சுவார்த்தையை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்” எனத் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri