எதற்கும் தயார்! மொட்டுக் கட்சி அறிவிப்பு-செய்திகளின் தொகுப்பு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்சபை கூட்டம் மற்றும் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் ஆகியவை சட்டத்துக்கு அமைவானது. தீர்மானங்களை நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தினால் அதனை தற்துணிவுடன் எதிர்கொள்வோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,“நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கடந்த ஒன்பது மாத காலமாக பொதுஜன பெரமுனவின் தவிசாளராக செயற்படவில்லை.
தவிசாளர் பதவியில் இருந்துக் கொண்டு கட்சியின் கொள்கைகளை விமர்சித்து, வேறுபட்ட அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டார்.
கட்சியின் தவிசாளர் கட்சி கொள்கைக்கு எதிராக செயற்படும் போது அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என பல தரப்பினர் தொடர்ந்து வலியுறுத்தினார்கள்.
கட்சி மட்டத்தில் கடுமையான நடவடிக்கைகளை எடுத்திருந்தால் அவர் தற்போது பாரிய நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க நேரிட்டிருக்கும்.”என தெரிவித்துள்ளார்.
கார் பயணத்தை தியாகம் செய்தால் 500 சுவிஸ் ஃப்ராங்குகள்: சுவிட்சர்லாந்தில் ஒரு சோதனை முயற்சி News Lankasri
மயிலுக்காக கோமதியிடம் பேசிய மீனாவிற்கு ஏற்பட்ட நிலைமை, லஞ்சம் வாங்கிய செந்தில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam