ஹொரவ்பொத்தானை பிரதேச சபை மொட்டு கட்சி வேட்பாளர் முதல் இடத்தில்!
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில், அனுராதபுரம் மாவட்டத்தின் றத்மலை கிராமத்தில், பொதுஜன பெரமுன கட்சி அதிக வாக்குகளை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொட்டு கட்சியின் வேட்பாளராக களமிறங்கிய ஏ.ஆர்.எம்.லரீப் றத்மலை கிராமத்தை முன்னிலைப்படுத்தி 284 வாக்குகளை பெற்றுள்ளார்.
வாக்குகள்
சமூக செயற்பாட்டாளர் ஏ.ஆர்.எம்.பாஹீம் மற்றும் அவரது செயலாளர் டி.எம்.றினாஸ் தலைமையில் இவர் தேர்தலில் களமிறங்கியுள்ளார்.

அனுராதபுரம் மாவட்டத்தில் இதுவரை காலமும் பொதுஜன பெரமுன கட்சி குறித்த கிராமத்தில் குறைந்த அளவிலேயே வாக்குகளைப் பெற்றதாகவும் இம்முறை அதிகளவிலான வாக்குகளை பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுராதபுரம் மாவட்டத்தில் முஸ்லிம், மற்றும் சிங்கள மக்கள் வாழும் கிராமத்தில் வரலாற்றில் முதல் தடவையாக அதிக வாக்குகள் பெற்றுக் கொண்டமை மகிந்த ராஜபக்சவிற்கு செய்த நன்றிக்கடன் எனவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam