வடக்கு - கிழக்கின் சாதனை மாணவர்களை கௌரவித்த SLIIT NORTHERN UNI
SLIIT NORTHERN UNI ஆனது வடமாகாணத்தில் முன்னணி கல்வி நிறுவனமாக திகழ்வதோடு வடக்கு - கிழக்கு மாணவர்களின் கல்வியியல் மற்றும் தொழில்வாண்மை அபிவிருத்திக்கான முழுமுயற்சியையும் வழங்கி வருகிறது.
யாழ்ப்பாணத்தில் கந்தர்மடம் பகுதியில் அமைந்துள்ள SLIIT NORTHERNUNI ஆனது வடக்கு கிழக்கு மாகாணத்தில் கல்விகற்கும் மாணவர்களுக்கு புலமைப்பரீசில் திட்டங்களையும், கல்விக்கடன் வசதிகளையும் யாழ் கல்வி மேம்பாட்டு நிதியுடாக (YES Fund) வழங்குகிறது.
இவ் மேன்மை பங்கெடுப்பின் ஓர் அங்கமாக உயர்தரத்தில் மாவட்ட ரீதியில் சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களையும் SLIIT NORTHERN UNI யில் உயர் கற்றல் சாதனைகளையும் பெற்ற மாணவர்களையும் கெளரவிக்கும் நிகழ்வுகளையும் MANAGE FEST எனும் பாடசாலை மாணவர்களுக்கான நுண்ணறிவு போட்டிகளையும் நடாத்தி வருகிறது.
அதன் படி எமது Chairman திரு. இந்திரகுமார் பத்மநாதன் அவர்களால் யாழ் இந்துக்கல்லூரியைச் சேர்ந்த மாவட்ட ரீதியில் உயர்தரத்தில் முதலிடத்தைப் பெற்ற உயிரியல் மற்றும் கணிதப் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களான செல்வன். ஆனந்தஜோதி வித்தியாசாகர் மற்றும் செல்வன். ஸ்ரீ பண்டகரன் சினேகன் என்போர்க்கும், சாதாரண பரீட்சையில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற யாழ் வேம்படி மகளீர் கல்லூரியைச் சேர்ந்த செல்வி அக்சயா ஆனந்தசயனன் அவர்களுக்கும், எமது SLIIT NORTHERNUNI யில் சிறப்புத் தேர்ச்சி ஏய்திய இரண்டாம் வருட மாணவன் செல்வன் முரளிதரன் பிரனீஷ் அவர்களுக்கு கெளரவிப்பு வழங்கப்பட்டது.
மேலும் உயர்தர பரீட்சையில் கிளிநொச்சி மாவட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்ற கிளி/முழங்காவில் மகா வித்தியாலயத்தை சேர்ந்த செல்வி. குபேந்திரன் துஷாமினி அவர்களுக்கும், எம் SLIIT NORTHERNUNI ஆல் நிகழ்த்தப்பட்ட MANAGE FEST நுண்ணறிவுப் போட்டிகளில் பங்கு பற்றி முதலிடத்தைப் பெற்ற மாணவி வேம்படி மகளிர் கல்லூரியைச் சேர்ந்த செல்வி சண்முகி கருணாநிதி அவர்களுக்கும் நான்கு வருட பட்டப்படிப்பை SLIIT NORTHERN UNI யில் தொடர்வதற்கான புலமைப்பரீசில் வசதியும் அவரின் சிறப்பு தேர்ச்சிக்கான கெளரவிப்பும் வழங்கப்பட்டது. அத்துடன் அப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கெளரவிப்பும் வழங்கப்பட்டன.
Visit our website:- https://northernuni.lk/
மேலும் தகவல்களுக்கு :- 0771471471