சுதந்திரக் கட்சிக்கு மறுக்கப்பட்ட ஆசனம்: ஆளும் கட்சியை எச்சரித்த தயாசிறி
கட்சிக்கு தொடர்ந்தும் ஆசனம் மறுக்கப்பட்டால், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அணியினர், நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுவின் கூட்டங்களில் இருந்து 'வலுக்கட்டாயமாக வெளியேருவார்கள்' என குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர,எச்சரித்துள்ளார்.
14 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சி தற்போது இரண்டு அணிகளாக பிளவுபட்டுள்ளது. ஒரு குழு அமைச்சர் பதவிகளைப் பெற்று அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் அதே வேளையில் சிறிசேன தலைமையிலான 5 பேர் கொண்ட குழு எதிர்க்கட்சியில் அமர்ந்துள்ளனர்.
இந்நிலையில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்க் குழுவானது, நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான விடயங்களில் தீர்மானங்களை எடுக்கும் செயற்குழுவில் இடம்பெறுவதற்கு மறுப்பு வெளியிடப்பட்டு வருகிறது.
பகிரங்க அறிவிப்பு

இந்த பிரச்சினை விரைவில் தீர்க்கப்படாவிட்டால், தாம், நாடாளுமன்ற விவகாரக்குழு கூட்டங்களுக்கு வலுக்கட்டாயமாக வெளியேரவுள்ளதாக தயாசிறி குறிப்பிட்டார்.
மேலும், எண்ணிக்கையில் உங்கள் பலத்தைப் பயன்படுத்தி எங்களை வெளியேற்றலாம், ஆனால் என்ன நடக்கிறது என்று பார்ப்போம் என ஆளும் கட்சியிடம் பகிரங்க அறிவிப்பொன்றையும் விடுத்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
வல்லரசுகளின் மோதல்களுக்கு மத்தியில் இந்து சமுத்திரத்தைப் பாதுகாக்க இணக்கப்பாடு: புதுடில்லியில் உயர்மட்டப் பேச்சு
வெற்றி பெற்ற பிறகு போர்களில் சேரும் நபர்கள் எங்களுக்குத் தேவையில்லை! பிரித்தானிய பிரதமருக்கு ட்ரம்பின் பதிவு
போரின் தொடக்கத்தை அறிவித்த அதே தொப்பியுடன்.. உயிரிழந்த 6 அமெரிக்க படை வீரர்களுக்கு மரியாதை செலுத்திய ட்ரம்ப்