கொழும்பில் ஒன்றுகூடிய சுதந்திரக் கட்சியின் அரசியல் பிரமுகர்கள்
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் மத்தியகுழு உறுப்பினர்கள் கொழும்பில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளனர்.
குறித்த கலந்துரையாடல் நேற்று(12.01.2025) இடம்பெற்றுள்ளது.
கொழும்பு- டார்லி வீதியில் அமைந்துள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்
இதன் போது எதி்ர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கு பொதுஜன ஐக்கிய முன்னணியின் கதிரைச் சின்னத்தில் வேட்பாளர்களை முன்னிறுத்துதல், புதிய தொகுதி அமைப்பாளர்களை நியமித்தல் உள்ளிட்ட விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கலந்துரையாடலில் நிமல் சிறிபால டி சில்வா, துமிந்த திசாநாயக்க, மஹிந்த அமரவீர, அங்கஜன் ராமநாதன், வீரகுமார திசாநாயக்க, சாரதி துஷ்மந்த மித்ரபால உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |