சிலிண்டர் சின்னத்தின் கீ்ழ் போட்டியிட சுதந்திரக்கட்சி இணக்கம்
ஶ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் நிமல் சிரிபால டி சில்வா தலைமையிலான குழு பொதுத்தேர்தலில் சிலிண்டர் சின்னத்தின் கீ்ழ் போட்டியிட இணக்கம் தெரிவித்துள்ளது.
ஶ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் நிமல் சிரிபால டி சில்வா மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் இடையே நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி ஆதரவு
அதன் பிரகாரம் எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிமல் சிரிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, துமிந்த திசாநாயக்க, சாமர சம்பத் தசநாயக்க உள்ளிட்ட குழுவினர் சிலிண்டர் சின்னத்தின் கீ்ழ் போட்டியிடவுள்ளனர்
இதற்கிடையே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இன்னொரு தரப்பு எதுவித நிபந்தனையும் இன்றி எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியை ஆதரிக்கவுள்ளதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |