இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்காவை வலுப்படுத்திய ரியான் ரிக்கிள்டன்

Sajithra
in கிரிக்கெட்Report this article
இலங்கைக்கு எதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்கா அணி வலுவான நிலையில் உள்ளது.
இதன்படி, நேற்றைய (5) முதல் நாள் ஆட்ட முடிவின் போது தென்னாபிரிக்கா அணி 7 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 269 ஓட்டங்களைக் குவித்திருந்தது.
தென்னாபிரிக்கா சார்பில், விளையாடிய ரியான் ரிக்கிள்டன், டெஸ்ட் போட்டியில் முதல் சதத்தை பதிவு செய்து 101 ஓட்டங்களை பெற்று கொண்டார்.
இலங்கை அணி
ரிக்கிள்டனின் 250 பந்துகளில் 11 பவுண்டரிகள் அடங்கும். இவரைத் தவிர இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற தலைவர் டெம்பா பவுமாவும் 78 ஓட்டங்களை எடுத்தார்.
நேற்று இலங்கை அணியின் வெற்றிகரமான பந்துவீச்சாளர் லஹிரு குமார 54 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதுமாத்திரமின்றி, அசித்த பெர்னாண்டோ 67 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், விஷ்வ பெர்னாண்டோ மற்றும் பிரபாத் ஜயசூரிய ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஆனந்தியின் கர்ப்பத்திற்கு யார் காரணம், வெளிவந்த உண்மை.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
