மே 9 பதிவாகிய வன்முறை சம்பவம்: இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசேட விசாரணை ஆரம்பம்
கடந்த மே மாதம் 9 ஆம் திகதி நாட்டில் பதிவாகிய வன்முறைகள் மற்றும் அதனைத் தொடர்ந்து வீடுகள் தீவைக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்டவை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசேட விசாரணை ஆரம்பமாகவுள்ளது.
இவ் விசாரணை நடவடிக்கைகள் இன்று (19) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்படவுள்ளது.
சிறப்பு அதிகாரி தலைமையில் விசாரணைக் குழு
இதன் போது தீயினால் வீடுகள் அழிக்கப்பட்ட ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தினமும், வாக்குமூலங்களுக்காக அழைப்பு விடுக்கப்படும் என ஆணைக்குழுவின் தலைவர் உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் ரோஹினி மாரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த விசாரணைகளை நடத்த, சிறப்பு அதிகாரி தலைமையில் விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மே மாதம் 9 ஆம் திகதி மற்றும் அதன் பின்னர் வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் மற்றும் அழிவுகள் தொடர்பில் 100க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாரசிங்க தெரிவித்துள்ளார்.
ரணிலிடம் வாக்குமூலம் பெற்றுள்ள CID பிரிவினர் - பிரபலங்கள் பலர் சிக்கவுள்ளதாக தகவல் |
மரண தண்டனை கைதி விடுதலை:மைத்திரியிடம் சி.ஐ.டியினர் விசாரணை |
