தபால் திணைக்களத்தின் பெயரை பயன்படுத்தி மோசடி
தபால் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் போன்ற போலி இணையதளத்தை பயன்படுத்தி நடைபெற்று வரும் மோசடி குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தபால் திணைக்களத்தின் பெயர் மற்றும் அதிகாரப்பூர்வ இணையதளத்தை தவறாக பயன்படுத்தி, மொபைல் SMS மூலம் “பார்சல் பெற பணம் செலுத்த வேண்டும்” என்று கூறி மக்களை ஏமாற்றும் மோசடி தற்போது இடம்பெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடியில், பயனர்களுக்கு அனுப்பப்படும் SMS இணைப்புகள் (Links) மூலம் போலி இணையதளங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு ஒன்லைன் கொடுப்பனவு Online Payment முறையில் வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி பணம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு கொடுப்பனவு அணுகல் வழியாக வங்கி அட்டை விவரங்களை உள்ளிடும் போது, பயனர்களின் வங்கி கணக்குகளில் உள்ள பணம் மோசடியாக திருடப்படும் அபாயம் உள்ளதாக தபால் துறை எச்சரித்துள்ளது.
மேலும், இத்தகைய SMS செய்திகளைப் பெற்றதற்கும், மோசடிக்கு இலக்கானதற்கும் தொடர்பான பல புகார்கள் கிடைத்துள்ளதாகவும், இந்த மோசடி குறித்து முன்னதாகவே குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் தொடர்புடைய பிற அமைப்புகளுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டியவை:
• அறியாத SMS இணைப்புகளை (Links) அழுத்த வேண்டாம்
• சந்தேகமான இணையதளங்களை பயன்படுத்த வேண்டாம்
• வங்கி அட்டை விவரங்கள் அல்லது OTP எண்களை யாருடனும் பகிர வேண்டாம்
• ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளில் மிகுந்த கவனம் செலுத்தவும்
பொதுமக்கள் இந்த வகையான மோசடிகளில் சிக்காமல் இருக்க விழிப்புடன் செயல்பட வேண்டும் என தபால் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri