2028ஆம் ஆண்டுக்குள் அரசாங்கத்தின் நோக்கம் இதுவே: வெளிப்படுத்திய அமைச்சர்
2028ஆம் ஆண்டுக்குள் இலங்கை முழுமையான உணவுத் தன்னிறைவை அடைவதை நோக்கி அரசாங்கம் செயல்பட்டு வருவதாக விவசாயம், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால் காந்த குறிப்பிட்டார்.
உள்நாட்டு உற்பத்தி
"கீரி சம்பா போன்ற அரிசி வகைகளின் இறக்குமதியை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்" என்று வலியுறுத்திய அவர், உள்ளூர் தேவையைப் பூர்த்தி செய்ய விவசாயிகள் தமது பயிர்ச் செய்கையை விஸ்தரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
சில அரிசி வகைகளின் உள்நாட்டு உற்பத்தி இன்னமும் போதுமானதாக இல்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போதைய அரசாங்கம், பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புதல், ஊழலை ஒழித்தல் மற்றும் நிலைபேறான தேசிய அபிவிருத்திக்கான மூலக்கல்லாக விவசாயத்தை வலுப்படுத்துதல் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்து வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
புதிய நீர் கட்டுப்பாடு அமைப்பு
'வாரி மஹிம – அபய உறுமய' திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு நவகிரி ஆற்றில் ரூ. 45 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய நீர் கட்டுப்பாடு அமைப்பை திறந்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றும்போது அவர் இதனை குறிப்பிட்டார்.
இதன் மூலம் மேலதிகமாக 500 ஏக்கர் நிலத்தில் ஆண்டுக்கு மூன்று போகம் பயிர் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
    
    
    
    
    
    
    
    
    
    திடீரென பழனிவேல் செய்த காரியம், கண்ணீர்விட்டு அழுத கோமதி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam