ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து செயற்பட தயாராகும் சஜித்
ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து செயலாற்றுவதற்கு தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார இதனை தெரிவித்துள்ளார். அரசாங்கத்துக்கு எதிராக செயற்படுவதற்கான பொது வேலைத்திட்டத்துக்காக, எதிர்கட்சிகளுடன் பேச்சு நடத்த ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தயாராகி வருகிறார் என்று நளின் பண்டார குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக்கட்சியாக இருந்தாலும் அது அரசாங்கத்துக்கு எதிராக செயற்படுமாக இருந்தால், அதனுடன் பேச்சு நடத்தப்படும் என்று நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
எனினும் ஐக்கிய தேசியக்கட்சியுடன் செயலாற்றும்போது ஐக்கிய மக்கள் சக்தி, நிபந்தனைகளின் அடிப்படையிலேயே செயலாற்றும் என்று நளின் பண்டார கூறியுள்ளார்.
அதேநேரம் ஐக்கிய தேசியக்கட்சியின் சில உறுப்பினர்களுடன் இணைந்து ஐக்கிய மக்கள் சக்தி செயற்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



