ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளை குழப்ப அரசாங்கம் முயற்சிக்கின்றது
ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளை குழப்ப அரசாங்கம் முயற்சிக்கின்றது என ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் மேடையில் தோன்றி அரசியல் செய்த ஒரு புலனாய்வு அதிகாரியிடம் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் பற்றிய விசாரணைகளை ஒப்படைத்தால், அந்தத் தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒருபோதும் நீதியும் நியாயமும் கிடைக்காது என தேசிய மக்கள் சக்தியின் ஹொரண அமைப்பாளர் சரித் அபேசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

வெவ்வேறு காலகட்டங்களில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள், ஈஸ்டர் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகளைத் தேடுவதாகக் கூறிக்கொண்டு பல்வேறு நாடகங்களை அரங்கேற்றி வருவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
ஒரு காலத்தில் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை இந்தத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாகக் காட்ட அன்றைய அரசாங்கம் முயன்றது.
ஆனால், தற்போதைய அரசாங்கமோ சுரேஷ் சாலேயை பிரதான சூத்திரதாரியாகக் காட்ட முயற்சித்து வருகிறது என தெரிவித்துள்ளார்.
காவல்துறை சேவையில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர், அரசியல் விசுவாசத்தின் அடிப்படையில் ஒப்பந்தப் ரீதியாக மீண்டும் சேவைக்கு அழைக்கப்பட்டுள்ள ஒரு நபரிடம் இந்த ஈஸ்டர் தாக்குதல் விசாரணைப் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய சார்புநிலை உடையவர்களால் நியாயமான விசாரணை நடக்காது என அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் மேடைகளில் நின்ற ஒருவரை புலனாய்வு அதிகாரியாக நியமித்து, அவரிடம் இந்த விசாரணைகளை ஒப்படைப்பதன் மூலம் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஆதாரங்களையும் விசாரணைகளையும் அழிக்கவே தற்போதைய அரசாங்கம் முயற்சிக்கிறது என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் நடந்த காலகட்டத்தில் கடமையில் இருந்த தகுதியான அதிகாரிகளைப் பயன்படுத்தி நேர்மையான விசாரணைகளை முன்னெடுக்க அரசாங்கத்தால் முடியும். ஆனால், அரசாங்கம் திட்டமிட்டே அதனைச் செய்ய மறுக்கிறது என தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் நடத்தும் இந்த ஒருதலைப்பட்சமான விசாரணை முறையானது இப்போது மக்கள் மத்தியில் நகைப்புக்குரியதாக மாறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையை மிகவும் நியாயமான முறையில் முன்னெடுப்பதற்கான 7 வெளிப்படையான வழிமுறைகளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஏற்கனவே முன்வைத்துள்ளார் என சரித் அபேசிங்க குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்த விசாரணைகளை நடுநிலையாகவும் துல்லியமாகவும் செய்ய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணத்துவம் வாய்ந்த புலனாய்வாளர்களைப் பயன்படுத்தும் முறையையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்மையான நீதி கிடைக்க வேண்டுமாயின், எவ்வித அரசியல் தலையீடுகளும் அற்ற நடுநிலையான விசாரணை மட்டுமே ஒரே வழி எனவும், ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்தை வைத்து நாடகமாட ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் தயாரில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 17 மணி நேரம் முன்
இன்று இரவு., கார்க் தீவு, எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம்- ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri