ஒரே பிரசவத்தில் பிறந்த ஆறு குழந்தைகள்: ஒரு சிசு மரணம்
கொழும்பு காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் நேற்றையதினம் தாயொருவருக்கு ஒரே பிரசவத்தில் பிறந்த ஆறு குழந்தைகளில் ஒரு குழந்தை இன்று(18) உயிரிழந்துள்ளது.
குழந்தையின் நுரையீரலில் ரத்தம் பாய்ந்ததால் இந்த மரணம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குழந்தை மரணம்
பொரளை லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ராகமை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு நேற்றையதினம் இவ்வாறு ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகள் பிறந்துள்ளன.
400 தொடக்கம் 700 கிராம் வரை எடை கொண்ட இந்த குழந்தைகளுக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையிலேயே குறித்த ஒரு குழந்தை இன்று உயிரிழந்துள்ளது.
மேலும், இலங்கையில் ஒரே பிரசவத்தில் ஆறு ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது இதுவே முதல்முறை ஆகும்.

சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam
