தமிழரசு கட்சியின் தீர்மானம் தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானத்தின் அறிவிப்பு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்மானித்திருந்தாலும், சஜித்தை ஆதரித்து எந்த பிரசாரக் கூட்டங்களிலும் கலந்துக்கொள்ளப் போவதில்லையென அந்த கட்சியின் மூத்த துணைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நேற்று (01.09.2024) நடந்த கட்சியின் மத்தியகுழுக் கூட்டத்தில் இதனை அவர் அறிவித்திருந்தார்.
நேற்றைய மத்தியகுழு கூட்டத்தில், ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென தீர்மானம் எடுக்கப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்றவர்களில் பலர் அந்தத் தீர்மானத்தை ஆதரித்தனர்.
சஜித்திற்கான ஆதரவு
இதேபோல, பொதுவேட்பாளர் ஆதரவு நிலைப்பாட்டை கிளிநொச்சி கிளை சார்பில் த.குருகுலராஜா சமர்ப்பித்தார். என்றாலும், கூட்டத்தில் கலந்து கொண்ட 26 பேரில் பலர் சஜித்தை ஆதரித்தனர்.

ஜனாதிபதி தேர்தல் நிலைப்பாடு தொடர்பில் கட்சிக்குள் நடந்த கலந்துரையாடல்களில், யாரையும் ஆதரிக்காமல் மக்கள் விருப்பமானவர்களுக்கு வாக்களிக்கலாமென அறிவிக்கலாமென சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்திருந்தார்.
அதுவே அவரது நிலைப்பாடாகவும் இருந்தது. எனினும், நேற்றைய கூட்டத்தில் சஜித்திற்கான ஆதரவு நிலைப்பாடாக எடுக்கப்பட்டது. நேற்றைய கூட்டத்திற்கு சீ.வீ.கே.சிவஞானமே தலைமை தாங்கினார்.
பிரச்சாரங்கள்
உடல்நல குறைவினால் மாவை கலந்துகொள்ளாத நிலையில், சீ.வீ.கே தலைமை தாங்கினார். கூட்டத்தின் போது தனது நிலைப்பாட்டை அவர் அறிவித்தார்.

சஜித்தை ஆதரிப்பதாக கட்சி அறிவித்தாலும், நான் சஜித் ஆதரவு பிரச்சாரங்களில் ஈடுபடமாட்டேன் எனவும் சஜித்தை ஆதரித்து மேடைகளில் பேசமாட்டேன் எனவும் அவர் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
புதன் - சனி சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம யோகம்: நாளை முதல் இந்த ராசிகளின் வாழ்க்கையே மாறப்போகுது! Manithan
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri