இலங்கையின் நிலைமை மிகவும் மோசமாக மாறியுள்ளது - அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்
இலங்கையில் கொவிட் வைரஸின் டெல்டா மாறுபாடு தீவிரமாக பரவி வருகின்றமையால் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் இலங்கையின் நிலைமை மிகவும் மேசமாகியுள்ளளது. அதில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
“எதிர்வரும் இரண்டு வாரங்கள் மிகவும் தீர்மானமிக்கதாகும். நோயாளிகள் அதிகமாக பதிவாகக்கூடிய காலப்பகுதியாக தான் எதிர்வரும் வாரங்கள் இருக்கும். இதனால் அத்தியாவசிய விடங்களை தவிர்த்து வீடுகளை விட்டு வெளியே செல்ல வேண்டாம்.
அவ்வாறு வெளியே சென்றால் கொவிட் தொற்றக் கூடும் என்பதனை மனதில் வைத்துக் கொண்டு வெளியே செல்ல வேண்டும்.
உலகம் முழுவதும் வேகமாக பரவும் டெல்டா மாறுபாடு தற்போது இலங்கையில் வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது.
பாரிய அளவிலான மக்கள் நாள் ஒன்றுக்கு உயிரிழக்கின்றனர். இந்ந வைரஸ் மிகவும் கொடூரமானது.
அது மிகவும் வேகமாக உடலில் தொற்ற கூடும். நுரையீரலை பாதிக்க கூடும். உடல் உறுப்புகளை பாதிக்க கூடும்” என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன மேலும் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள் News Lankasri
