ரணில் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் ஏற்பட்டுள்ள நிலைமை:மனித உரிமை கண்காணிப்பகம்
அரசியல் மறுசீரமைப்பு மற்றும் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்புக்கூறலை எதிர்பார்க்கும் செயற்பாட்டாளர்களை தொந்தரவுக்கு உள்ளாக்கவும் தன்னிச்சையாக தடுத்து வைப்பதற்கும் இலங்கை அரசு அவசரகாலச் சட்டத்தை பயன்படுத்துவதாக மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
ரணில் பதவியேற்ற பின்னர் அச்சுறுத்தப்படும் சமூக செயற்பாட்டாளர்கள்
கடந்த ஜூலை 21 ஆம் திகதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்ததில் இருந்து ஆர்ப்பாட்டகாரர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்,சட்டத்தரணிகள், செய்தியாளர்கள் அச்சுறுத்தப்படுவதும், தேடுதல்கள் நடத்தப்படுவதும்,தன்னிச்சையான கைதுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவற்றின் ஊடாக பொலிஸாரும், இராணுவத்தினரும் எதிர்ப்புகளை அடக்க முயற்சிப்பதாக மனித உரிமை கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
பதவி விலகும் முன் தப்பிச் சென்ற கோட்டாபய
கொழும்பு மற்றும் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அரசாங்கத்திற்கு நடத்தப்பட்டு வந்த போராட்டங்கள் காரணமாக கடந்த ஜூலை 15 ஆம் திகதி பதவி விலகும் முன்னர் அன்றைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு நாட்டில் இருந்து தப்பிச் செல்ல நேரிட்டது.
ஜூலை 22 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, போராட்டகாரர்களை கலைக்குமாறும் கொழும்புக்கு மத்தியில் இருந்த அவர்களின் இடங்களை உடைத்தெறியுமாறும் பாதுகாப்பு படையினருக்கு உத்தரவிட்டார்.
இதன் பின்னர் பொலிஸார் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களை இலக்கு வைத்து கைதுகள் மற்றும் தடுத்து வைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதை காண முடிகிறது எனவும் மனித உரிமை கண்காணிப்பகம் கூறியுள்ளது.

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
