இலங்கையில் சைனோபாம் தடுப்பூசி வழங்கும் முறை தவறு - பேராசிரியர் ஜீவந்தர எச்சரிக்கை
இலங்கையில் கொவிட் தொற்றினை தடுப்பதற்காக சைனோபாம் தடுப்பூசி வழங்கும் முறை தவறானதென ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்திம ஜீவன்தர தெரிவித்துள்ளார்.
சைனோபாம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் வழங்கிய பின்னர் 3 வாரத்தில் இரண்டாவது டோஸ் வழங்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் இலங்கை மக்களுக்கு 4 வாரங்களின் பின்னரே இரண்டாவது டோஸ் வழங்குவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டிருப்பது மிகப்பெரிய பிரச்சினையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
3 வாரத்தில் இரண்டாவது தடுப்பூசி வழங்கினால் 4 வாரத்தில் கொவிட் தொற்றிற்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது. எனினும் மேலும் ஒரு வாரம் தாமதமாக வழங்குவதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க தாமதமடைகின்றது.
இது மக்களுக்கு இளைக்கப்படும் அநீதியாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சைனோபாம் தடுப்பூசி வழங்கும் போது இரண்டாவது தடுப்பூசியை 3 வாரங்களில் வழங்குமாறு தான் கடந் மே மாதம் முதல் அறிவித்த போதிலும் சுகாதார அமைச்சு அதனை ஏற்றுக் கொள்ளவில்லை அவர் குறிப்பிட்டுள்ளார்.
டெல்டா வைரஸ் நாட்டினுள் வேகமாக பரவும் சந்தரப்பத்தில், இலங்கைக்கு பாரிய அளவு தடுப்பூசி கிடைக்கும் போதிலும் மக்களுக்கு அதனை உடனடியாக வழங்காமல் இருப்பது குழப்பமான விடயமாக உள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.