சினோபெக் நிறுவனத்தின் எரிபொருட்களின் விலையும் அதிகரிப்பு
இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளை சினோபெக் நிறுவனமும் அதிகரித்துள்ளது.
இதன்படி ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீட்டர் ஒன்றின் விலை 5 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 368 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீட்டர் ஒன்றின் விலை 8 ரூபாயினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 456 ரூபா என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை, 5 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 360 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் விலை 7 ரூபாயினால் குறைக்கப்பட்டு புதிய விலை 468 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.