உண்மையினை சிங்கள மக்கள் விளங்கிக்கொண்டு தமிழ் தேசத்தினை அங்கீகரிக்க வேண்டுமென கோரிக்கை (Photos)

Batticaloa Gajendrakumar Ponnambalam Sri Lanka
By Kumar Jun 14, 2022 10:02 AM GMT
Report

சொந்த தேசத்தினை சூறையாடி தங்களுக்கான நலன்களை மட்டும் தேடிய தலைமைத்துவங்கள் 74 வருடங்களுக்குப் பின்னர் அம்பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த உண்மையினை சாதாரண சிங்கள மக்கள் விளங்கிக்கொண்டு தமிழ்த் தேசத்தினை அங்கீகரிக்க வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரிக்கை விடுத்துள்ளார். 

மட்டக்களப்பு - படுவான்கரை பகுதியை உலுக்கிய மகிழடித்தீவு படுகொலை நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

உண்மையினை சிங்கள மக்கள் விளங்கிக்கொண்டு தமிழ் தேசத்தினை அங்கீகரிக்க வேண்டுமென கோரிக்கை (Photos) | Sinhalese Understand Truth Recognize Tamil Nation

அஞ்சலி நிகழ்வு 

1987 ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் திகதி இறால் வளர்ப்பு பண்ணையில் இடம்பெற்ற படுகொலையும், 1992 ஆம் ஆண்டு ஜூன் 12ம் திகதி இடம்பெற்ற மகிழடித்தீவு படுகொலையும் சேர்த்து ஏறக்குறைய 180பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

இவர்களை நினைவுகூரும் வகையில் வருடாந்தம் இந்த நினைவு தினம் பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்களின் பங்களிப்புடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உட்பட்ட தமிழ்த் தேசிய ஆதரவாளர்கள், படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் கலந்து கொண்டனர்.

உண்மையினை சிங்கள மக்கள் விளங்கிக்கொண்டு தமிழ் தேசத்தினை அங்கீகரிக்க வேண்டுமென கோரிக்கை (Photos) | Sinhalese Understand Truth Recognize Tamil Nation

இதன்போது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன், நினைவுரை நடைபெற்றது.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசத்திற்குரிய நீதிக்கான போராட்டத்தினை தீவிரப்படுத்தியுள்ள இந்த சூழலில் தமிழினப்படுகொலை நடைபெற்ற இந்த வாரத்தில் இலங்கை அரசாங்கம் தனது நாட்டின் வங்குரோத்து தன்மையினை ஏற்றுக்கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

உண்மையினை சிங்கள மக்கள் விளங்கிக்கொண்டு தமிழ் தேசத்தினை அங்கீகரிக்க வேண்டுமென கோரிக்கை (Photos) | Sinhalese Understand Truth Recognize Tamil Nation

சிங்கள மக்களிடம் முன்வைத்துள்ள கோரிக்கை 

தங்களது இனத்துக்கு மட்டும்தான் இந்த நாடு என நினைத்து தமிழினத்தை அடக்கியொடுக்கி அழிப்பதற்கு எடுத்த முயற்சியின் ஒட்டுமொத்த சுமைதான் ஒட்டு மொத்த பொருளாதாரத்தினையும் அழித்து வங்குரோத்து நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இன்றாவது சாதாரண சிங்கள அப்பாவி மக்கள் தங்களது தலைவர்கள் செய்த அநியாயங்களை இனவாத அடிப்படையில் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட அநியாயங்களை இன அழிப்பினை சரியான வாகையில் புரிந்துகொண்டுள்ளனர்.

இனவாதத்தினை காட்டி தனது சொந்த தேசத்தின் சொத்துகளைச் சூறையாடி தங்களது நலனைமட்டும் பேணிய தலைமைத்துவங்கள் 74வது ஆண்டுக்குப் பின்னர் அம்பலப்படுத்தப்பட்டுள்ளனர்.

உண்மையினை சிங்கள மக்கள் விளங்கிக்கொண்டு தமிழ் தேசத்தினை அங்கீகரிக்க வேண்டுமென கோரிக்கை (Photos) | Sinhalese Understand Truth Recognize Tamil Nation

இந்த உண்மையினை சாதாரண சிங்கள மக்கள் விளங்கிக்கொண்டு தமிழ்த் தேசத்தின் இருப்பினை அங்கீகரித்து, தமிழ்த் தேசமும் சிங்கள தேசமும் சேர்ந்த நாடாக இலங்கை அங்கீகரிக்கப்பட்டு ஒரு முற்போக்கு பாதைக்கு இட்டுச்செல்வதற்குச் சிங்கள தேசம் முன்வரவேண்டும்.

அவ்வாறான ஒரு அடிப்படையான மாற்றம் வரும்போதுதான் இந்த இலங்கை தீவின் முழுமை அடையக்கூடியதாகவிருக்கும். இலங்கை அரசாங்கம் வங்குரோத்து நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ள இந்த சூழ்நிலையில் புலம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களின் உழைப்பு இலங்கை அரசாங்கத்தின் உழைப்பினைவிட அதிகமாகவுள்ள நிலையில், நல்லிணக்கத்தினை ஏற்படுத்த தமிழ்த்தேசத்தின் இருப்பினை உறுதிப்படுத்தக்கூடிய வகையில் இலங்கையின் அமைவினை மாற்றியமைப்பதன் ஊடாக சிங்கள தேசமும் தமிழ்த் தேசமும் இணைந்து இந்த நாட்டினை ஆக்கப்பூர்வமான வகையில் கட்டியெழுப்புவதற்குத் தமிழினம் தயாராகவிருக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US